ஆர்யா வெளியிட்ட ‘கோல்டு கால்’ முன்னோட்டம்: நான்கு இளம் விற்பனையாளர்களின் கலகலப்பான பயணம் செப்டம்பர் 18 முதல் திரையில்!
ஆர்யா வெளியிட்ட ‘கோல்டு கால்’ முன்னோட்டம்: நான்கு இளம் விற்பனையாளர்களின் கலகலப்பான பயணம் செப்டம்பர் 18 முதல் திரையில்!
புதுமுகங்களின் திறமையையும், இளைஞர்களின் அன்றாட வாழ்க்கைச் சவால்களையும் நகைச்சுவையுடன் இணைத்து உருவாகியுள்ள ‘கோல்டு கால் – Cold Call’ திரைப்படம் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வழக்கமான கதைக்களத்திலிருந்து சற்று விலகி, விற்பனைத் துறையில் பணியாற்றும் இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு தென்னிந்திய மாநிலங்களைச் ...

