Tuesday, October 27
Shadow

ஆர்யா வெளியிட்ட ‘கோல்டு கால்’ முன்னோட்டம்: நான்கு இளம் விற்பனையாளர்களின் கலகலப்பான பயணம் செப்டம்பர் 18 முதல் திரையில்!

ஆர்யா வெளியிட்ட ‘கோல்டு கால்’ முன்னோட்டம்: நான்கு இளம் விற்பனையாளர்களின் கலகலப்பான பயணம் செப்டம்பர் 18 முதல் திரையில்!

புதுமுகங்களின் திறமையையும், இளைஞர்களின் அன்றாட வாழ்க்கைச் சவால்களையும் நகைச்சுவையுடன் இணைத்து உருவாகியுள்ள ‘கோல்டு கால் – Cold Call’ திரைப்படம் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வழக்கமான கதைக்களத்திலிருந்து சற்று விலகி, விற்பனைத் துறையில் பணியாற்றும் இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த நான்கு விற்பனை பிரதிநிதிகளின் வாழ்க்கைப் பயணமே இப்படத்தின் முக்கியக் கதைக்களமாக அமைந்துள்ளது. சந்தையில் புதிதாக அறிமுகமாகும் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் அவர்கள் சந்திக்கும் சவால்கள், போட்டிகள், நட்பு, காதல் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவை கலகலப்பான திரைக்கதையில் சொல்லப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ் மற்றும் கிருஷ்ணா விஜய் ஆகிய நான்கு புதுமுக நடிகர்கள் இப்படத்தின் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, கீர்த்தனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காமெடி, காதல், மோதல் மற்றும் ஆக்சன் என அனைத்து அம்சங்களையும் இணைத்து கமர்சியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படம், இளைஞர்களையும் குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளதாக முன்னோட்டக் காட்சிகள் உணர்த்துகின்றன.

ஜி.என். சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்துள்ளார். சுரேஷ் ஆறுமுகம் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

‘கோல்டு கால்’ திரைப்படத்தை வாக்த்ரோ என்டர்டெய்ன்மெண்ட் (Walkthrough Entertainment) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கேசவ மூர்த்தி தயாரித்துள்ளார். ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.

ஆர்யா வெளியிட்டுள்ள இப்படத்தின் முன்னோட்டம் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, நான்கு மாநிலங்களைச் சேர்ந்த விற்பனை பிரதிநிதிகளின் வாழ்க்கையை நகைச்சுவை பின்னணியில் சொல்லும் முயற்சி, ‘கோல்டு கால்’ திரைப்படத்திற்கு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பர மற்றும் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். புதுமுகங்களின் புதிய முயற்சியாக உருவாகியுள்ள ‘கோல்டு கால்’, செப்டம்பர் மாத திரையரங்கு வெளியீடுகளில் கவனம் பெறும் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Arya Launches ‘Cold Call’ Trailer: A Fun Ride with Four Young Salesmen Hits Screens on September 18

The trailer of the upcoming Tamil film Cold Call, featuring a group of promising newcomers in the lead, has been officially launched by popular Tamil actor Arya. The actor shared the trailer on his social media platforms and extended his best wishes to the entire team.

Directed by Thambidurai, Cold Call is set to hit theatres worldwide on September 18. The film takes a refreshing and unconventional approach by bringing the lives of young sales professionals to the big screen through a lively blend of comedy, romance, action and drama.

The story revolves around four sales representatives from Tamil Nadu, Kerala, Andhra Pradesh and Karnataka. As they work to introduce and market new products, their professional and personal lives take them through a series of unexpected challenges, competitions, friendships, romances and entertaining conflicts.

Newcomers Sidhu Mooli Mani, Sri Vaishnav, Santhosh and Krishna Vijay play the central characters in the film. The supporting cast includes Sreekanth, Balaji Rajasekar, Amitha Ranganatha, Nisha Hegde, Keerthana and several others.

Going by the trailer, Cold Call promises to be a commercial entertainer packed with humour, romance, conflicts and action. The film aims to present the struggles and experiences of sales professionals in an entertaining and relatable manner.

The film’s cinematography has been handled by G.N. Saravanan, while Pranav Giridharan has composed the music. Editing is by Suresh Aarumugam.

Produced by Keshava Moorthy under the banner of Walkthrough Entertainment, Cold Call will be distributed by Jeneesh of Action Reaction.

Arya’s launch of the trailer has given the film additional visibility among Tamil cinema audiences. The unique premise of following four sales representatives from different South Indian states has also generated curiosity about the film.

With its youthful cast, unconventional storyline and commercial entertainment elements, Cold Call is gearing up for its worldwide theatrical release on September 18. The makers are currently engaged in extensive promotional activities ahead of the film’s release.