தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியவராக இருக்கிறார் நடிகை நிகிஷா படேல்
தமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியவராக இருக்கிறார் நடிகை நிகிஷா படேல். அரவிந்தசாமி நடிப்பில் வெளியான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் கொஞ்சநேரம் வந்தாலும் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த நிகிஷா படேல் தற்போது இயக்குநர் எழில் இயக்கும் புதிய படத்தில் ஜிவி பிரகாஷோடு நடித்து வருகிறார்.
எழில் இயக்கும் படம் எதுவாக இருந்தாலும் அதில் ஹீரோவிற்கு போலவே ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கும். அதனால் இப்படத்திற்குப் பிறகு தமிழில் நிகிஷா படேல் கவனம் ஈர்க்கும் நாயகியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்தப்படம் பற்றி நடிகை நிகிஷா படேல் கூறியதாவது,"இந்தப் படத்தில் நான் ஐடி நிறுவன ஊழியராக நடிக்கிறேன். படத்தின் நகைச்சுவை பகுதியின் ஆன்மாவே நான் தான் என்று சொல்லலாம். முதல் நாள் படப்பிடிப்பில் யோகா செய்யும் காட்சி படமாக்கட்டது. ஜிவி பிரகாஷு...
