பார்க்கணும் போல இருக்கு – திரை விமர்சனம்
இயக்குனர் S.P,ராஜ்குமார் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் ஏன் விஜய் நடித்த சுறா படத்தின் இயக்குனரும் இவர் தான் இயக்குனர் S.P.ராஜ்குமார் படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும் அந்த வகையில் இந்த படமும் முழுக்க முழுக்க காமெடி கதை என்று தான் சொல்லணும் அதோடு கொஞ்சம் செண்டிமெண்ட் கலந்த படமாக கொடுத்துள்ளார் .
எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் துவார்.ஜி.சந்திரசேகர் வழங்க , "நீ நான் நிலா " பரதன் - அன்சிபா ஜோடி நடிக்க சூரி, கஞ்சா கருப்பு,லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ், விஜய் ஆனந்த், சிங்கப்பூர் துரைராஜ், பிளாக் பாண்டி, முத்துக்காளை, ஜானகி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க, எஸ், பி.ராஜ்குமாரின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கத்தில் வந்திருக்கும் படம் தான் "பார்க்கணும் போல இருக்கு".
கிராமத்து காதல் ஜோடி ஒன்று வீட்டில் எக்குத்தப்பாய் மாட்டிக் கொண்டதால் ஒரு மாதிர...
