
நாட்டியப் பேரொளி பத்மினி பிறந்த நாள் அவரை உங்களுக்கு தெரியாத விஷயங்கள்
தமிழ் திரை உலகம் கண்ட மிக சிறந்த நடிகைகளில் நடிகை பத்மினியும் ஒருவர். திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் தங்கப்பன் பிள்ளை-சரஸ்வதி அம்மாள் தம்பதியரின் மகளாக 1932ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி பிறந்தார் பத்மினி. நான்கு வயதிலேயே நாட்டியப் பயிற்சியைத் தொடங்கிய இவர், இளம் வயதில் அரங்கேற்றமும் நடத்தி மெய்சிலிர்க்க வைத்தவர்.
இவரது மூத்த சகோதரி லலிதா, இளைய சகோதரி ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள் தான். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என புகழ் பெற்று விளங்கினார்கள். நாட்டிய உலகில் புகழோச்சி நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்ட பத்மினி, குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர்.
பத்மினியும் சகோதரி லலிதாவும் 1948-ம் ஆண்டு இருவரும் நாட்டிய நட்சத்திரங்களாக சினிமா உலகுக்கு அறிமுகம் ஆனார்கள். கல்பனா என்ற இந்தி மொழிப் படத்தில் அறிமுகம் ஆனாலும், இவர்கள் நடனமாடி வெளிவந்த முதல் திரைப்படம் கன்ன...