18 ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டி – மோகன்லால் இணையும் ‘பேட்ரியாட்’ OTT வெளியீடு; அரசியல் சதிகளும் கண்காணிப்பு அரசியலும் பேசும் த்ரில்லர்!
18 ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டி – மோகன்லால் இணையும் ‘பேட்ரியாட்’ OTT வெளியீடு; அரசியல் சதிகளும் கண்காணிப்பு அரசியலும் பேசும் த்ரில்லர்!
மலையாள திரையுலகின் இரு ஜாம்பவான்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே படத்தில் இணைந்திருக்கும் “பேட்ரியாட்” திரைப்படம், ஜூன் 5 முதல் ZEE5 OTT தளத்தில் வெளியாகவுள்ளது. அரசியல், உளவு, தொழில்நுட்பம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், ஒரு அதிநவீன அரசு கண்காணிப்பு அமைப்பை மையமாகக் கொண்டு நகர்கிறது. நாட்டின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம், பின்னர் பொதுமக்களை கட்டுப்படுத்தும் கருவியாக மாறும்போது ஏற்படும் விளைவுகளே கதையின் முக்கிய கருவாக அமைந்துள்ளத...
