
இயல்பாகவே ஒரு வெற்றிப் படத்தில் பணிபுரிந்த உணர்வு சீமராஜாவில் கிடைத்தது – கலை இயக்குனர் முத்துராஜ்
கிராமப்புற திரைப்படங்களுக்கு அதிக வேலை இருக்காது, மிகவும் எளிதாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். பச்சைப்பசேலென வயல் வெளிகள், அமைதியான ஏரிகள், தெளிவான சிற்றோடைகள், வண்ணமயமான திருவிழாக்கள், இனிமையான குயில் சத்தம் ஆகியவை மட்டுமே கிராம்மத்து படங்களின் ஆதாரம் என்ற நினைப்பு இருக்கிறது. ஆனால் உண்மையில், தொழில்நுட்பக் குழுவின் இமாலய உழைப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக 'கலை இயக்குனர்' பங்கு அதிகமாக தேவைப்படுகிறது. ஒரு 'திருவிழா' படம் என்று சாதாரணமாக சொல்லி விடலாம். ஆனால் அந்த திருவிழா அனுபவத்தை திரையில் கொண்டு வருவது மலையை இழுப்பதற்கு சமம். சிவகார்த்திகேயன்-சமந்தா நடித்துள்ள சீமராஜாவில் கலை இயக்குனர் முத்துராஜின் உழைப்பு அபரிமிதமானது.
சீமராஜா படத்தின் ட்ரைலர் மற்றும் காட்சிகள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கலை இயக்குனர் முத்துராஜ் குழுவில் உள்ள ...