
பிரபுதேவாவுடன் இணையும் நிவேதா பெத்துராஜ்
பிரபுதேவா நடிப்பில் ஏ.சி.முகில் இயக்கி வரும் புதிய படத்தில் சுதந்திரமாக தான் நினைக்கும் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள விரும்பும் பெண்ணாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.
நாயகனைப் போல நாயகிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படத்தின் கதையை இயக்குநர் உருவாக்கியுள்ளார். படத்தில் போலீஸ் அதிகாரியான பிரபுதேவா பெண்களைப் போற்றும், மதிக்கும் சமூக பொறுப்புள்ள ஒரு மனிதராகவும் பிரதிபலிப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். முதல் கட்டப்படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் சென்னையில் தொடங்குகிறது....