நடிகை பாவானாவுக்கு எளிமையான முறையில் திருமணம்
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமானவர் நடிகை பாவனா.
இவர் தனது நண்பரும், காதலருமான சினிமா பட தயாரிப்பாளர் நவீனை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 9-ஆம் தேதி கொச்சியில் எளிமையான முறையில் நடந்தது.
அதனைத் தொடர்ந்து திருமணம் அக்டோபர் 27-ந் தேதி நடைபெறே இருந்த நிலையில் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், வருகிற 22-ஆம் தேதி பாவனாவுக்கும், நவீனுக்கும் உறவினர்கள் மத்தியில் திருச்சூரில் திருமணம் நடக்கவுள்ளது. நிச்சயதார்த்தத்தைப் போலவே திருமணத்தயைும் எளிமையான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தனது திருமணம் பற்றி நடிகை பாவனா கூறியதாவது:-
வருகிற டிசம்பர் 22-ந் தேதி எனது திருமணம் சொந்த ஊரான திருச்சூரில் நடைபெற உள்ளது. எனது திருமணத்தில் ஆடம்பரமோ, பிரமாண்டமோ இருக்காது. அதிக விலை உயர்ந்த நகைகளை திருமணத்தன்று அணியவும் எனக்க...