சென்னை வானவில் திரைப்பட விழா!!! ஜனவரி 4 முதல் 8 வரை 5 நாட்கள் நடந்து நிறைவுப்பெற்றது!!!
சென்னை வானவில் திரைப்பட விழாவை (Chennai Rainbow Film Festival {LGBT}) சென்னை தோஸ்த் என்ற அமைப்பானது, ஜனவரி 4-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரை 5 நாட்களுக்கு கோலாகலமாக நடத்தியுள்ளது.
பாலின சிறுபான்மையினா் அல்லது மாற்றுப்பாலினம் கொண்டவா்களைப் பற்றியும், அவா்களின் வாழ்க்கை முறையைப் பற்றியும் ஆவணப்படங்கள், திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் மூலமாகப் பதிவு செய்துள்ள திரைப்படக் குழுவினா்களுக்கு சென்னை வானவில் திரை விழா ஒரு பிரம்மாண்ட மேடையை அமைத்துத்தருகிறது என்றால் அது மிகையல்ல.
முதல் நாளான 4-ந்தேதி மாலை அன்று சென்னை பார்க் ஹயாட் ஹோட்டலில் , பல்வேறு துறைகளில், தளங்களில் எங்கள் சமூக மேன்மைக்காக பணியாற்றும் ஆர்வலர்களை கௌரவிக்கும் பொருட்டு, அவர்களுக்கு வானவில் விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விருதுகளை டாக்டர் கமலா செல்வராஜ் தலைமையில் வழங்கப்பட்டன. அதன்படி, அமெரிக்கா கன்சுலேட் ஜெனரல் பிலிப் மின், பி...
