மழை, காடு, ஆக்சன்… எல்லா சவால்களையும் தாண்டி ‘நோவா’வில் புதிய அவதாரம் எடுத்துள்ள ரைசா வில்சன்!
மழை, காடு, ஆக்சன்... எல்லா சவால்களையும் தாண்டி ‘நோவா’வில் புதிய அவதாரம் எடுத்துள்ள ரைசா வில்சன்!
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள நடிகை ரைசா வில்சன், விரைவில் வெளியாகவுள்ள ஹாரர்-சயின்ஸ் பிக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘நோவா – பேஸ் ஒன்: தி அரைவல்’ மூலம் ரசிகர்களை வியக்க வைக்கும் புதிய பரிமாணத்தில் களமிறங்கவுள்ளார்.
ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை, விளம்பரத் திரைப்பட உலகில் அனுபவம் மிக்க இயக்குநர் மிலோ இயக்கியுள்ளார். ஹாரர், சூப்பர்நேச்சுரல், சயின்ஸ் பிக்ஷன் மற்றும் ஆக்சன் அம்சங்களை இணைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம், தமிழ் சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் கதைக்களங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரைசா வில்சன், தனது அனுபவங்களை பகிர்ந்தபோது, “இதுவரை நான் நடித்த எந்தக் கதாபாத்திரத்த...
