ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தொடரும் சோகம்
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 7 ஆம் தேதி வெளியான ‘காலா’ படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக படம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் படங்களுக்கு வழக்கமாக இருக்கும் ஓபனிங் கூட இப்படத்திற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ரஜினி படங்கள் வெற்றிப் பெற்றாலும் தோல்வியடைந்தாலும் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளானதில்லை. ஆனால், முதன் முறையாக ‘காலா’ படத்தை மீம்ஸ்கள் மூலம் நெட்டிசன்கள் கலாய்த்து வருவது ரஜினி ரசிகர்களை அப்செட்டாக்கியுள்ளது.
இந்த நிலையில், பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ரஜினிகாந்தின் ‘2.0’ இந்த ஆண்டு வெளியாகாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினி ரசிகர்களை மேலும் சோகமாக்கியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் ‘2.0’ படத்தை லைகா நிறுவனம்...
