ஆன்மிக பயணம்: ரஜினி விளக்கம்
அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், இமாச்சல பிரதேசம் பாலம்பூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கியுள்ளார்.o
தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதால் அரசியலில் இறங்கி ஆன்மிக அரசியலை கொண்டு வரப்போவதாக போவதாக அறிவித்த நடிகர் ரஜினி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று அவர் இமயமலைக்கு கிளம்பி சென்றார். ஏர் இந்திய மூலம் நேற்று இமாச்சல பிரதேசத்தில் உள் கங்கரா நகர் வந்தார். அங்கிருந்து பாலம்பூர் மாவட்டம் கன்ட்படி கிராமத்தில் உள்ள மகாவதார் பாபா ஆசிரமத்தில் தங்கி தியானம் செய்து வருகிறார். அங்கு அவர் 10 நாளுக்கு மேல் தங்கியிருப்பார் என தெரிகிறது.
உத்தர்காண்ட் மாநிலம், டேராடூனில் ரஜினி நிருபர்களிடம் கூறுகையில், ஆன்மிக பயணமாகவே இங்கு வந்தள்ளேன். இதில் அரசியல் ஏதுமில்லை. நடிகர் அமிதாப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தற்போது தான் தெரியவந்தது. அவர் குணமடைய கடவு...
