கல்லூரி மாணவி கொலை பெண்கள் பாதுகாப்பு சூப்பர் ஸ்டார் சொன்ன பதில் !
இமயமலை செல்வதாக அறிவித்துவிட்டு சென்னையில் இருந்து இன்று கிளம்பினார் ரஜினிகாந்த். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்த கேள்விக்கு அப்போது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
சென்னையில் இருந்து விமானத்தில் ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு செல்லும் அவர் அங்கிருந்து தர்மசாலா, உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
இன்று காலை போயஸ்கார்டன் வீட்டில் இருந்து கிளம்பிய ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தனது பயண திட்டம் குறித்து அவர் எடுத்துரைத்தார். ஆனால், பெண்கள் பாதுகாப்பு குறித்த ஒரு கேள்வியை அவர் தவிர்த்த விதம், சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சென்னையில் கல்லூரி மாணவி அஸ்வினி என்பவர் நேற்று பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் அவரின் முன்னாள் காதலன் அழகேசன் என்பவரால் கழுத்தை அறுத்...