பத்மாவத் (மக்களின் ராணி) – திரைவிமர்சனம் (4/5)
சிங்களப் பேரரசை ஆண்ட மன்னரின் அழகிய மகளான இளவரசி பத்மாவதியாக வருகிறார் தீபிகா படுகோனே. ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த சித்தூர் மன்னர் ரத்தன் சென்னாக வருகிறார் ஷாஹித் கபூர். சிங்கள நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்து வகைகளை கொண்டு வருவதற்காக அவர் இலங்கை செல்கிறார். அங்கு காட்டில் மான் வேட்டையாடி கொண்டிருந்த பத்மாவதி செலுத்திய ஒரு அம்பு குறிதவறி, ரத்தன் சென் மீது பாய்கிறது. இதையடுத்து ரத்தன் சென்னிடம் மன்னிப்பு கேட்கும் பத்மாவதி, ரத்தன் சென்னை ஒரு குகையில் வைத்து ரகசியமாக சிகிச்சை அளிக்கிறார்.
சிகிச்சை செய்யும் நிலையில் ரத்தன் சென் - பத்மாவதி இடையே காதல் மலர்கிறது. பின்னர் இருவருக்கும் திருமணமும் செய்து வைக்கப்படுகிறது. பின்னர் பத்மாவதியை தனது நாட்டிற்கு அழைத்துச் செல்கிறார். சித்தூர் மக்களும் பத்மாவதியை தங்களது இளைய ராணியாக ஏற்று அவர்மீது பாசமும். மரியாதையும் காட்டி வருகின்றனர். ஆனால், ...