நடிகை ரேவதி பிறந்த தினம் இவரை பற்றிய சில தகவல்கள்
கேரளாவை சேர்ந்த இவரது இயற்பெயர் ஆசா கேளுண்ணி குட்டி. இவர் மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்தி, ஆங்கிலத்தில் திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவர் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார்.
நடிகை ரேவதி பாரதி ராஜா இயக்கத்தில் வெளிவந்த மண் வாசனை என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர்.
இதனைத் தொடர்ந்து நடிகர்கள் ரஜினி, கமல், கார்த்தி மற்றும் மோகன் உள்ளிட்ட 80 களின் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவருடனும் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர்.
ரேவதி தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் எனப் பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களை இயக்கி, பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர், நடிப்பு, இயக்கம் என்று சினிமாத்துறை சார்ந்த...
