லைகா ப்ரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் ‘கரு’ இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
லைகா ப்ரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் 'கரு'. சாய் பல்லவி, நாக சௌர்யா நடிப்பில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
2014ல் கத்தி என்ற பெரிய படத்தை கதையை நம்பி எடுத்தோம். அதை தொடர்ந்து பிரமாண்ட படங்களையும், கரு மாதிரி சின்ன பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறோம். வினியோகம், தயாரிப்பு என எல்லாவற்றிலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கொடுத்து வருகிறோம். இது எங்களுக்கு பெருமையான ஒரு படம் என்றார் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிஷாந்தன்.
விஜய் எனக்கு கிடைத்த பொக்கிஷம். கடந்த 10 ஆண்டுகளாக விஜய் படங்களில் வேலை செய்து வருகிறேன். இயக்குனர் ஆனாலும் அவருடன் தொடர்ந்து வேலை செய்வேன் என்றார் வசனகர்த்தா அஜயன் பாலா.
லைகாவோடு எனக்கு 15 வருட தொடர்பு இருக்கிறது....
