‘சண்டக்கோழி 2’ தந்த வாழ்க்கையை எண்ணி மகிழ்ச்சியில் திளைக்கிறார் வில்லன் நடிகர் அர்ஜெய்.
விஷால் - கீர்த்தி சுரேஷ் -ராஜ்கிரண் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'சண்டக்கோழி 2.'இப்படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் அர்ஜெய்.
இவர் விஷால் மூலம் 5 ஆண்டுகளுக்கு முன்' நான் சிகப்பு மனிதனி'ல் அறிமுகம் செய்யப்பட்டவர் .
சற்றே இடைவெளிக்குப் பின் சண்டக்கோழி 2-ல் விஷாலுடன் மோதும் வில்லனாக உயர்ந்துள்ளார்.
சண்டக்கோழி 2 வாய்ப்பை லிங்குசாமி மூலம் பெற்றுள்ளார்.
இது பற்றி அர்ஜெய் பேசும் போது, "என் நண்பர் மூலம் சண்டக்கோழி 2 படத்துக்கு நடிகர்கள் தேர்வாகும் ஆடிஷன் நடக்கிறது என்று அறிந்தேன். நான் நேரில் சென்றேன். இப்படித்தான் தேர்வானேன். இதைப் பற்றி அண்ணன் விஷாலிடம் பிறகு கூறினேன்.தன் மூலம் அறிமுகமா ன நான் இதில் வாய்ப்பு பெற்றதற்காக அவர் மகிழ்ந்தார். வாழ்த்தினார் " என்கிறார் அர்ஜெய்.
படப்பிடிப்பு அனுபவம் எப்படி ? விஷால...
