Wednesday, June 24
Shadow

Tag: #santhanam #police

தலைமறைவான சந்தானத்தை தேடும் போலீஸ்!

தலைமறைவான சந்தானத்தை தேடும் போலீஸ்!

Latest News
சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர் அருகே திருமணம் மண்டபம் கட்டி வந்த நடிகர் சந்தானம், கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு ரூ.3 கோடி கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சண்முக சுந்தரம், 3 வருடமாக மண்டபத்தை கட்டிக்கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தானம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதற்கிடையே, இந்த பிரச்சினை குறித்து பேசுவதற்காக நடிகர் சந்தானம் நேரடியாக சண்முக சுந்தரத்தை பார்க்க சென்றுள்ளார். அப்போது அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அண்டஹ் நேரம் அங்கு வந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவர் சண்முக சுந்தரத்திற்கு ஆதரவாக பேச, அவருடனும் சந்தானம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கு இடையே கை கலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சந்தானம் அடித்ததில் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ...