இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்!
இப்படத்தைக் கிராந்தி பிரசாத் இயக்குகிறார். இவர் பல விளம்பரப்படங்கள் , குறும்படங்களை இபக்கியவர். அவற்றுக்காக விருதுகளும் பெற்றவர் . திரைப்படக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர் ,தெலுங்கில் சில இயக்குநர்களிடமும் திரைப்பாடம் பயின்றவர் . இருந்தாலும் படங்கள் பார்த்து கற்றவை அதிகம் . தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து தமிழ் திரைச் சூழலை அறிந்து வைத்துள்ளார். இங்கே முகங்களை விட்டு விட்டு திறமைக்கு மட்டும் தரப்படும் மரியாதையை வைத்து தமிழில் படம் இயக்க வந்திருக்கிறார் '
ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் 'சந்தோஷத்தில் கலவரம் 'என்கிற இப்படத்தை திம்மா ரெட்டி வி.சி. தயாரிக்கிறார் . .
"ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதே கதை. அதனால்தான் 'தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல் 'என்று டைட்டிலுடன் டேக் லைன் போட்டுள்ளோம் இது ஒரு சஸ்பென்ஸ் த்ரி...
