சர்காருக்கு போட்டியாக களம் இறங்கும் 2.0 வெற்றி யாருக்கு
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படம், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு, காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. தீபாவளிக்குப் படம் ரிலீஸாக இருக்கிறது. கடந்த வருட தீபாவளிக்கு விஜய்யின் ‘மெர்சல்’ வெளியானது. ஒரு வருடத்துக்குப் பின் ‘சர்கார்’ ரிலீஸாக இருப்பதால், அவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
ஷங்கர் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித...
