இன்று மாலை வெளியாகிறது காஞ்சனா 3 செகன்ட் சிங்கிள்
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தற்போது இயக்கி நடித்துள்ள படம் காஞ்சனா 3. இதன் முதல் பாகமான முனி படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்த வேதிகா மற்றும்பிக்பாஸ் புகழ் ஓவியா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர, கோவை சரளா, ஶ்ரீமன், தேவதர்ஷினி, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். எஸ்.எஸ் தமன் இசையமைக்கும் இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறார்கள். மேலும் காஞ்சனா 3 படம் ஏப்ரல் 19ல் திரையிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் "காஞ்சனா 3" படத்தின் செகண்ட் சிங்கிள் 'காதல் ஒரு விழியில்' இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். .
காஞ்சனா 3 என்பது ராகவா லாரன்ஸ் என்ற இயக்குநரால் இயக்கப்பட்டு வரும் ஒரு தமிழ் திகில் பழிவாங்கும் வகைத் திரைப்படம். முனி தொடரின் நாலாவது பாகமாகவும், காஞ்சனா தொடரின் மூன்றாவது பாகம...