சீமராஜா ரசிகர்களுக்கு ஒரு பண்டிகை விருந்தாக இருக்கும் – இசையமைப்பாளர் டி இமான்!
'திருவிழா' மற்றும் 'கொண்டாட்டம்' போன்ற வார்த்தைகள் எப்போதுமே இசையோடு மிக நெருங்கிய உறவை கொண்டவவை. சீமராஜா படத்தின் பாடல்கள் ஏற்கனவே பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருவது இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் டி.இமானின் ஸ்டூடியோவில் உருவான பாடல்கள் தான் ஊர் திருவிழாக்கள் முதல் நகரின் பார்ட்டிகள் வரை ஒலித்து வருகிறது. குத்துபாடல், நாட்டுப்புற பாடல் மற்றும் மெல்லிசை பாடல் என சீமராஜா ஒரு ஹிட் ஆல்பமாக மாறியிருக்கிறது. "சீமராஜா திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு பண்டிகை விருந்தாக இருக்கும் என நம்பிக்கையோடு கூறுகிறார் இசையமைப்பாளர் டி.இமான்.
"திரை இசையை பொறுத்தவரை இசையமைப்பாளர்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். முதல் வகையில், சில திரைப்படங்கள் மொத்த படப்பிடிப்பும் முடிந்த பிறகு, பின்னணி இசை கோர்ப்பில் இசையமைப்பாளர்களின் மாயாஜாலத்தால் படத்தை மேலும் மெறுகேற்ற அவர்களை சார்ந்திருப்பார்கள். இன்னொ...
