
ரிலீஸ் பிரச்னை இருக்கு அதில் என் படங்களுக்கும் தான் விஜய் சேதுபதி தாக்கு
இயக்குனர் சேரனின் திருமணம் முதல் பார்வை அறிமுக விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபத படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் அறிமுகம் செய்து வைத்தார் அந்த விழா முடிந்து விஜய் சேதுபதி வெளியில் வரும் போது சீதக்காதி படத்தின் ரிலிஸ் மற்றும் ரிலிஸ் சிக்கலை பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது விஜய் சேதுபதி பேசியது
படங்களை ரிலீஸ் செய்வதில் நிறைய பிரச்சனை இருக்கு என்று விஜய் சேதுபதி மீண்டும் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் 96 பட ரிலீஸ் பிரச்சனையின்போதும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படம் வரும் 20ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படம் ரிலீஸாவதில் பிரச்சனை இருப்பதாக பேச்சு கிளம்பியது.
சீதக்காதி வரும் 20ம் தேதி ரிலீஸாகிறது. இது எனக்கு ரொம்ப பெருமைக்குரிய படம். நிச்சயமாக நல்ல ஒரு கமர்ஷியல் படமாக இருக்கும். நடுவுல கொஞ்...