நடிகை சுருதி ஹாசன் பிறந்த தினம்
சுருதிஹாசன் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார்.
சுருதிஹாசன் 1986, சனவரி 28 இல் சென்னை நகரில் பிறந்தார்.[2] இவரது இயற்பெயர் சுருதி ராஜலெட்சுமி. சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், மும்பைகல்லூரியில் உளவியலும் முடித்தார். பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார்.
சுருதிஹாசன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் இந்த பாடலை பாடினார். இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும் ஹேராம் (தமிழ் மற்றும் இந்தி), என்மன வானில், வாரணம் ஆயிரம், லக் (இந்தி) மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.
இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹேராம் திரைப்படத...