நடிகை ஷாமிலி பிறந்த தினம்
இவர் தமிழ் சினிமாவில் 2 வயதிலேயே நடிக்க வந்த ஒரே நடிகை ஷாமிலி தான். 1987ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவரது பெற்றோர், பாபு – அலீஸ். மலையாள குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் நடிப்பில் மீது கொண்ட பற்று காரணமாக சென்னைக்கு வந்தனர். அதன் பிறகு 2 ஆண்டுகள் ஆன நிலையில், 1989ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த ராஜநடை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஆனால், இந்தக் கதாபாத்திரம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. 1990-ம் ஆண்டில் இவர் நடித்த அஞ்சலி என்ற திரைப்படத்திற்காக தேசிய விருதினை பெற்றார். அப்போது இவருக்கு வயது 2. இப்படத்தைத் தொடர்ந்து தை பூசம், செந்தூர தேவி, துர்கா, அன்பு சங்கிலி, வாசலிலே ஒரு வெண்ணிலா, சிவசங்கரி, தேவர் வீட்டு பொண்ணு, சின்ன கண்ணம்மா, சிவராத்திரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு விக்ரம் பிரபு நடித்த வீர சிவாஜி என்ற ப...
