சிபிராஜ் மற்றும் நிகிலா விமல் நடிக்கும் ரங்கா படத்தின் படபிடிப்பு முடிந்தது
சிபிராஜ் தனது சிறப்பான கதை தேர்வால் வெற்றிகரமாக தனது எல்லைகளை விரிவாக்கம் செய்து கொண்டே வருகிறார். அடுத்து வெளிவர இருக்கும் அவரின் 'ரங்கா' படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நாளில் இருந்தே ஏதோ புதிதாக ஒரு விஷயம் படத்தில் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சமூகப் பிரச்சினையின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த ஆக்ஷன் திரில்லர் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. படம் சிறப்பாக வந்திருப்பதால் மொத்த குழுவில் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
"வழக்கமாக, தயாரிப்பாளர்கள் படத்தின் வெற்றிக்கு பிறகு நன்றி அறிவிப்பு செய்வார்கள். ஆனால் நான் இது தான் நன்றி சொல்ல சரியான நேரம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர்களின் உழைப்பும், ஒத்துழைப்பும், ஆதரவும் முழுப்படத்துக்கும் இருந்தது. குறிப்பாக, காஷ்மீரின் கடும் குளிரில், மிகவும் அசாதாரணமான சூழலில...

