5 மில்லியன் பார்வைகளை கடந்த ‘சிக்மா ஸ்டைல்’ பாடல்; ஜூலை 31 வெளியீட்டை நோக்கி அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
5 மில்லியன் பார்வைகளை கடந்த ‘சிக்மா ஸ்டைல்’ பாடல்; ஜூலை 31 வெளியீட்டை நோக்கி அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. அந்த வரிசையில், சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ‘சிக்மா ஸ்டைல்’ பாடல், குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்தில், நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
பாடலின் உற்சாகமான இசை, வண்ணமயமான காட்சியமைப்பு மற்றும் நடன வடிவமைப்பு ஆகியவை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக சந்தீப் கிஷனின் திரையிருப்பும், ஃபரியா அப்துல்லாவின் நடனமும் பார...
