Wednesday, June 24
Shadow

Tag: #simbu #str #kaveriissue

காவேரி மௌன போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை – சிம்பு விளக்கம்

காவேரி மௌன போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை – சிம்பு விளக்கம்

Latest News, Top Highlights
சென்னையில் நடிகர் சங்கம் மற்றும் பெப்சி தொழிலாளர் சங்கம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மவுனப் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து நடிகர் சிம்பு கடுமையான விமர்சனம் வைத்தார். இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ நடிகர் சங்கம் சார்பில் மவுனப் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் நான் கலந்துகொள்ளவில்லை. முதலில் தமிழ்நாட்டில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடக்கிறது. நிறைய தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. அதை நான் தவறு என்று கூறவில்லை. ஏனென்றால் நல்ல விஷயம் நடக்கும்போது அதை ஆதரிக்க வேண்டும். ஒரு நடிகனாக என்னுடைய ஒத்துழைப்பை நான் கொடுத்துக்கொண்டுதான் வருகிறேன். ஆனால் ஜிஎஸ்டி வரி இப்போது நடக்கும் ஸ்டிரைக்கில் பல பிரச்சினைகள் உள்ளன. அதை அரசிடம் கொண்டு சென்று கூறி அதற்கு தீர்வு காணுவதற்கே நாம் திண்டாடிக்கொண்டு இருக்கிறோம்...