சீமராஜா எனக்கு நல்ல உள்ளங்களுடன் வேலை செய்யும் வாய்ப்பை அளித்தது – நடிகை சிம்ரன்!
காலங்கள் கடந்தாலும் ஒரு சிலரே ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பார்கள். அந்த வகையில் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத, மகாராணியாக தனி இடத்தை பிடித்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் எவ்வளவோ நடிகைகள் வந்து போயிருக்கிறார்கள், ஆனால் இன்றைக்கும் தனக்கென தீவிர ரசிகர்களை கொண்டிருக்கும் ஒரு நாயகி என்றால் அது சிம்ரன் தான்.
தனது படைப்புகள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை பெற்று மிகப்பெரிய உயரத்தை அடைந்த சிம்ரன், நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று யாராவது நினைத்திருப்போமா?. சீமராஜா படத்தில் ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பொன்ராம் சார் என்னை அணுகிய போது எனக்கும் அந்த மனநிலை தான் இருந்தது. நான் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொளள உண்மையிலேயே தயங்கினேன். ஆனால் கதையை என்னிடம் சொல்ல எனக்காக பொன்ராம் சார் பொறுமையாக காத்திருந்ததால் தான் இது நடந்தது. ஒருமுறை, நான் கதையை கேட்ட பி...
