நரிக்குறவர் சமூகத்தின் அரசியல் கனவைப் பேசும் ‘சிங்காரம்’ – அக்டோபர் 30-ல் உலகம் முழுவதும் வெளியீடு!
நரிக்குறவர் சமூகத்தின் அரசியல் கனவைப் பேசும் ‘சிங்காரம்’ – அக்டோபர் 30-ல் உலகம் முழுவதும் வெளியீடு!
யோகி பாபு நடிப்பில் சமூகச் சிந்தனையும் நகைச்சுவையும் கலந்த புதிய திரைப்படம் – இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: நகைச்சுவை நடிகராகத் தொடங்கி கதாநாயகனாகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்காரம்’ திரைப்படம், வரும் அக்டோபர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ராக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர், இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டு கவனம் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அரசியலும் சமூக நீதியும் பேசும் கதை!
நரிக்குறவர் சமூகத்தின் வாழ்க்கை முறை, வரலாறு, சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள், உரிமைக...
