பாலியல் வன்முறை தடுப்பு விழிப்புணர்வு வீடியோவில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனுக்கும் குழந்தைகளுக்கும் இடையே பரவலாக காணப்படும் பரஸ்பர அன்பு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அவர்கள் அவரை நடிகரையும் தாண்டி தங்கள் குடும்பத்தில் ஒருவராக நேசிக்கிறார்கள். இல்லையென்றால், பேசவே ஆரம்பிக்காத குழந்தைகள் கூட அவருக்கு தங்கள் அன்பை முத்தம் மற்றும் அரவணைப்பால் எப்படி வழங்க முடியும். அந்த கள்ளம், கபடமற்ற அன்புக்கு கைமாறாக, குழந்தைகளை மோசமாக பாதிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் ஊக்கப்படுத்த மாட்டேன் என உறுதி அளித்திருக்கிறார். இதை பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். இப்போது இன்னும் ஒரு படி மேலே போய், தற்போதைய சமூகத்தின் முக்கிய தேவையான "குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை" தடுப்பு விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்திருக்கிறார்.
Chisel அமைப்பின் நிறுவனர் அரசி அருள் மற்றும் PEACE (NGO) அமைப்பின் நிறுவனர் ராகிணி முரளிதரன் ஆகியோர் திருமதி ஆர்த்தி சிவகார்த்தி...