Saturday, April 18
Shadow

Tag: #sivamanasulapushpa

‘சிவா மனசுல புஷ்பா’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க கௌதமி விதித்த நிபந்தனை..!

‘சிவா மனசுல புஷ்பா’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க கௌதமி விதித்த நிபந்தனை..!

Latest News, Top Highlights
ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சிவா மனசுல புஷ்பா'.. வாராகி இயக்கி நடித்துள்ள இந்தப்படத்திற்கு, எந்த நேரத்தில் இந்த டைட்டிலை வைத்தாரோ தெரியவில்லை, தற்போது இந்த டைட்டிலே இவருக்கு சிக்கலை இழுத்துக்கொண்டு வந்துவிட்டுள்ளது.. ஆம்.. டைட்டிலை மாற்றினால் தான் இந்தப்படம் ரிலீசாகும் என்கிற இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. வேறு யாரும் இந்த டைட்டிலுக்கு உரிமை கொண்டாடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை.. டைட்டிலை மாற்றச்சொலி போர்க்கொடி தூக்கியிருப்பது சென்சார் போர்டு தான்.. இத்தனைக்கும் அழகான தமிழ் பெயர்கள் கொண்ட டைட்டில் தான்.. அப்படி இருக்க சிக்கல் உருவானது எப்படி..? இந்தப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதுமே அரசியல் அரங்கில் அதிர்வலைகளை எழுப்பி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரு மடங்காக்கியது உண்மைதான். ஆனால் இந்தப்படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டியபோது...
சிவா மனசில புஷ்பா… திட்டமிட்டபடி  முடிந்தது படப்பிடிப்பு!

சிவா மனசில புஷ்பா… திட்டமிட்டபடி முடிந்தது படப்பிடிப்பு!

Latest News
சர்ச்சை நாயகன் வாராகி இயக்கி, தயாரித்து நடித்த சிவா மனசில புஷ்பா படப்பிடிப்பு திட்டமிட்டபடி கச்சிதமாக முடிவடைந்தது. அரசியல் களத்தை மையப்படுத்தி வாராகி உருவாக்கியுள்ள சிவா மனசில புஷ்பா படத்தில் ஷிவானி குரோவர், ஜிஸ்மி என இரண்டு நாயகிகள். இருவரும் வாராகியின் ஜோடியாக வருகின்றனர். ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவுக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான பெண்ணுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு, சண்டைதான் இந்தப் படத்தின் கதை. ஒரு அரசியல்வாதி எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதைச் சொல்லும் படம் இது என்கிறார் வாராகி. இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த மே மாதம் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 40 நாட்களில் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. படத்தின் இறுதிக் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. படப்பிடிப்பில் செய்தியாளர்களை வாராகி மற்றும் நாயகிகள் ஷிவானி குரோவர், ஜிஸ்மி ஆக...