‘ஸ்கெட்ச்’ வெற்றி விழாவில் இயக்குனர் விஜய் சந்தரை பாராட்டிய விக்ரம்
சீயான் விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் நடிப்பில் வேளியான ‘ஸ்கெட்ச்’ படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் தாணு, படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன், சீனு, விக்ரம், ஸ்ரீமன், டைரக்டர் விஜய் சந்தர். கல்லூரி வினோத், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தயாரிப்பாளர் தாணு பேசுகையில்,‘ இந்த படத்திற்கு தற்போது பெரிய அளவில் ஆதரவு கிடைத்து வருகிறது. மலேசியாவில் கபாலி 72 சென்டர்களிலும், ஸ்கெட்ச் 71 சென்டர்களிலும் திரையிடப்பட்டிருக்கிறது. தஞ்சாவூரில் இந்த படம் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டது. தற்போது நான்கு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சாட்சி .’ என்றார்.
விக்ரம் பேசுகையில்,‘ கமர்சியலாக ஒரு படம் பண்ணவேண்டும் என்ற நினைத்து,...


