
சகுனி படத்தில் ‘மனசெல்லாம் மழையே’ பாடல் பாடிய பின்னணி பாடகர் சோனுநிகாம் பிறந்த நாள்
ஹரியானாவில் பிறந்த இவர் பெங்காலி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி துளு, அசாம், ஒடிசி, நேபாளி போன்ற மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் பாப் பாடகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சோனுநிகம். பாலிவுட்டின் பிரபல பாடகர். தமிழிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். சகுனி படத்தில் ‘மனசெல்லாம் மழையே’ பாடல் அவர் குரல்வளம்தான்.
பாடகர் சோனுநிகம் தனது டுவிட்டர் பதிவில், நான் முஸ்லிம் அல்ல. தொழுகை அழைப்பு என்னை எழுப்புகிறது. இதுபோன்ற மதத்திணிப்புகள் இந்தியாவில் எப்போது முடியும் என்று தெரிவித்திருந்தார். பின்னர் தொழுகை அழைப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்த பாடகர் சோனு நிகம் தனது கருத்தை மாற்றி கொண்டார்
இது சமூக ஊடகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. சோனுநிகமுக்கு எதிராக பலர் கருத்துக்கள் கூறிவந்தனர். மேற்குவங்காளத்தை சேர்ந்த மத அமைப்பு பாட...