Sunday, February 15
Shadow

Tag: #SubbuPanchu

மனுசனா நீ  – திரை விமர்சனம் (2/5)

மனுசனா நீ – திரை விமர்சனம் (2/5)

Review, Top Highlights
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து இளைஞர்கள் கடத்தப்படுகின்றனர். இதுகுறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, நாயகன் ஆதர்ஷும், நாயகி அனு கிருஷ்ணாவும் காதலிக்கிறார்கள். ஆதர்ஷின் அப்பா நடத்தி வரும் ரைஸ் மில் நிலத்தை அந்த ஊர் ரவுடியான சுப்பு பஞ்சு கைப்பற்ற நினைக்கிறார். அந்த இடத்தை அடைவதற்காக பல்வேறு சூழ்ச்சிகளையும் செய்கிறார். தனத அப்பாவுக்கு தொல்லை கொடுக்கும் சுப்பு பஞ்சுவை அடிக்க நினைக்கும் ஆதர்ஷை, சுப்பு பஞ்சுவின் ஆட்கள் அடித்து விடுகின்றனர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு, எழுந்து நடக்கவே முடியாத நிலையில் இருக்கும் ஆதர்ஷின் உடலில் அந்த மருத்துவமனையின் டீனான கஸாலி ஒரு மருந்தை செலுத்தி அனுப்புகிறார். அந்த மருந்து செய்யும் வேலையால் ஆதர்ஷ் திடீரென சக்தி வாய்ந்தவனாக மாறி, சுப்பு பஞ்சு மற்றும் அவனது ஆட்களை அடித்து நொறுக்குகிறார்...