தெலுங்கு நகைசுவை நடிகர் சுனில் பிறந்த தினம்
சுனில் வர்மா ஒரு தெலுங்கு நகைச்சுவை நடிகர். இவர் அந்தால ராமுடு (2006), திரைப்படத்தில் முதன்முறையாக கதையின் நாயகனாக நடித்தார், பிறகு 2010-ம் ஆண்டு இயக்குநர் எஸ். எஸ். ராஜமெளலியின் மரியாத ராமன்னா (2010) திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்தார். இவர் தன்னுரைய நகைச்சுவை நடிப்பிற்காக பல விருதுகளை வென்றுள்ளார். இவர் இயக்குநர் வீரபத்திரன் திரைப்படமான பூல ரங்கடு (2012) படத்திற்காக சிக்ஸ் பேக் ஏற்றியிருக்கிறார்.
1974-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் திகதி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பீமாவரத்தில் பிறந்தார், இவருடைய ஐந்தாவது அகவையில் தன்னுடைய தந்தையை பறிகொடுத்தார், தன்னுடைய தாயின் பராமரிப்பில் வளர்ந்தார்.
இவர் நடிகர், சிரஞ்சீவியின் தீவிர ரசிகர், தன்னுடைய பள்ளி பருவத்தில் சிறந்த நடனக்கலைஞராக வர வேண்டுமென்று எண்ணினார். இவர், வட்டார நடன் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றார். இவருடைய ஆசிரியரின் அறிவுரைய...
