திருமணக் கொண்டாட்டத்தின் உற்சாகத்தை திரையரங்குக்கு முன்பே கொண்டு வந்த “விஸ்வநாத் & சன்ஸ்” – சூர்யா குரலில் வெளியான “தி வெட்டிங் சாங்” ரசிகர்களின் புதிய கொண்டாட்ட கீதம்!
திருமணக் கொண்டாட்டத்தின் உற்சாகத்தை திரையரங்குக்கு முன்பே கொண்டு வந்த "விஸ்வநாத் & சன்ஸ்" – சூர்யா குரலில் வெளியான "தி வெட்டிங் சாங்" ரசிகர்களின் புதிய கொண்டாட்ட கீதம்!
சென்னை:
குடும்ப உறவுகள், திருமணக் கொண்டாட்டம், இசை, நடனம் என அனைத்தையும் ஒரே பாடலில் ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில், "விஸ்வநாத் & சன்ஸ்" திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிளான "தி வெட்டிங் சாங்" (The Wedding Song) தற்போது வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் சிங்கிளான "பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை" இசை ரசிகர்களிடையே பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, இந்தப் புதிய பாடலும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, இந்த சீசனின் கொண்டாட்டப் பாடலாக பேசப்பட்டு வருகிறது.
திருமணம் என்பது இரண்டு நபர்களின் இணைவு மட்டுமல்ல; குடும்பங்களின் மகிழ்ச்சியும் உறவுகளின் கொண்டாட்டமும் கூட. அந்த உணர்வை முழுமை...


