நடிகர் சூர்யா பிறந்த நாள் பதிவு
சூர்யா அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் நடிகர் சிவக்குமாருக்கும், லக்ஷ்மிக்கும் மகனாக ஜூலை மாதம் 23 ஆம் தேதி, 1975 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருக்கு கார்த்தி என்று ஒரு சகோதரனும், பிருந்தா என்ற சகோதரியும் உள்ளனர். அவரது சகோதரரான கார்த்தியும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரென்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய பள்ளிக் கல்வியை சென்னையில் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியிலும், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளியிலும் கற்றார். பின்னர், சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இன்றைய திரையுலகப் பிரபலங்களான விஜய், விஷ்ணுவர்தன், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா போன்றோர் அவரது கல்லூரி நண்பர்களாக இருந்தனர்.
நடிகரென்ற பெருமையோ, மமதையோ சிரிதளுவும் இல்லாத சிவகுமார் அவர்கள், தனது பிள்ளைகளையும் அவ்வாறே வளர்த்தார் என்பத...
