என்னது சூர்யா படத்தின் பட்ஜெட் இவ்வளவு கோடியா
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், அல்லு சிரிஷ் மற்றும் பலர் நடிக்க புதிய படம் ஒன்று விரைவில் ஆரம்பமாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதத்தில் லண்டனில் ஆரம்பமாக உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில் ஆகிய வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
சூர்யாவுக்கு தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வரவேற்பு உள்ளது. அதனால், அந்த ரசிகர்களையும் கவரும் விதத்தில் மலையாளத்திற்காக மோகன்லாலையும், தெலுங்கிற்காக அல்லு சிரிஷையும் படத்தில் நடிக்க வைக்கிறார்கள். சூர்யாவின் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக சாயிஷா நடிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி நடித்துள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தியின் ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். அதனால், கண்டிப்பாக சூர்யா ஜோடிய...
