தேசிய விருது பெற்ற சினிமா கலைஞர்களுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து……!!
ஆண்டு தோறும் சிறந்த திரைப்படம், நடிகர் நடிகை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு மத்திய அரசு தேசிய விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. 2016 -ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்களின் வரிசையில் இந்த முறை தமிழ் படங்களும் நிறைய விருதுகளை வென்றுள்ளது .
விருதுகளை வென்ற படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவிக்கிறது .
நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் " சிறந்த மாநில மொழி படத்துக்கான விருது ட்ரிம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் S.Rபிரகாஷ் பாபு ,S.R பிரபு இணைந்து தயாரித்த- ராஜூ முருகன் இயக்கிய 'ஜோக்கர்' படம் தேர்வு் பெறறுள்ளது.இதே படத்தில் ஜாஸ்மினு ... என்ற பாடலை பாடிய சுந்தர ஐயர் சிறந்த பின்னணி பாடகராகவும் . மேலும் 2D எண்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்...
