துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’… ரீடேக் இல்லாத அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’... ரீடேக் இல்லாத அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
‘No Retakes Allowed’ என மாஸ் எச்சரிக்கையுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் – புதிய அவதாரத்தில் துருவ் விக்ரம்
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களையும் அழுத்தமான நடிப்பையும் தேர்வு செய்து வரும் துருவ் விக்ரம், அடுத்ததாக ரசிகர்களை முழுமையாக கவரும் வகையிலான அதிரடி கமர்ஷியல் பாதையில் களமிறங்குகிறார். அவரது புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed)’ என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
தலைப்புடன் வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், துருவ் விக்ரமின் இதுவரை பார்த்திராத ஒரு புதிய திரைமுகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டைலிஷான மாஸ் தோற்றம், தீவிரமான பார்வை, அதிரடியான உடல்மொழி என போஸ்டர் முழுவதும் ஆக்ஷன் அதிர்வை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘ஜாக்கி’... பெயரி...

