
துருவ் விக்ரமின் அடுத்த அதிரடி ஆட்டம் – ரமேஷ் வர்மாவுடன் முதன்முறையாக இணையும் DV4
தமிழ்–தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் புதிய ஆக்ஷன் திரைப்படம்
துருவ் விக்ரமின் அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் புதிய ஆக்ஷன் திரைப்படத்தில், இயக்குநர் ரமேஷ் வர்மாவுடன் துருவ் விக்ரம் முதன்முறையாக இணைகிறார்.
தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா, இந்தப் படத்தை இயக்குகிறார். இதுவரை பார்த்திராத வகையிலான ஆக்ஷன் பின்னணியில் துருவ் விக்ரமின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தக் கூட்டணி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
பென் ஜெயந்திலால் வழங்கும் இப்படத்தை, பென் ஸ்டுடியோஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்.வி. ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கோனேரு சத்யநாராயணா மற்றும் சிரீஷா குரபதி ஆகியோர் தயாரிக்கின்றனர்.

வெறும் ஆக்ஷன் காட்சிகளை மையமாகக் கொண்ட படமாக இல்லாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகள், டிராமா மற்றும் வலுவான கதை சொல்லலுக்கும் முக்கியத்துவம் அளித்து இப்படம் உருவாகிறது. அதே நேரத்தில், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
துருவ் விக்ரமின் திரைப்பயணத்தில் இதுவரை அவர் ஏற்ற கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆக்ஷன் கதாபாத்திரத்தை இந்தப் படம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகரின் திரை ஆளுமையையும், ரமேஷ் வர்மாவின் ஆக்ஷன் திரைப்பட உருவாக்க அனுபவத்தையும் இணைக்கும் வகையில் படம் உருவாக உள்ளது.
இப்படத்திற்கான பூஜை நிகழ்ச்சி ஏற்கனவே நடைபெற்றுவிட்ட நிலையில், தற்போது முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பை அக்டோபர் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, படக்குழு ரசிகர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட உள்ளது. துருவ் விக்ரமின் பிறந்தநாளான செப்டம்பர் 23-ம் தேதி, இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு, முழுமையான நடிகர்கள் பட்டியல் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இதனால், செப்டம்பர் 23-ம் தேதி வெளியாகவிருக்கும் அறிவிப்பில் இந்தப் படத்தின் கதைக்களம், கதாபாத்திரங்கள் மற்றும் படத்தின் உலகம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை மனதில் வைத்து பெரிய அளவிலான ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகிறது.
செப்டம்பர் 23 – தலைப்பு, முழு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு அறிவிப்பு.
அக்டோபர் – படப்பிடிப்பு தொடக்கம்.
DV4 × RV7 – புதிய கூட்டணியின் அதிரடி தொடக்கம்.

Dhruv Vikram’s Next Action Outing: Actor Teams Up with Ramesh Varma for DV4
Tamil–Telugu bilingual action film set to mark the first collaboration between Dhruv Vikram and director Ramesh Varma
Dhruv Vikram is gearing up for his next film, and the project brings together an exciting new combination. The actor is set to headline a Tamil–Telugu bilingual action film directed by filmmaker Ramesh Varma, marking their first collaboration.
Ramesh Varma, who has directed Telugu films including Ratchasan and Khiladi, is set to present Dhruv Vikram in a completely different action-oriented avatar. While details about the actor’s character are being kept under wraps, the makers are said to be working on a role that will be distinct from the characters he has played so far.
Presented by Pen Jayanthilal, the film is jointly produced by Pen Studios, Sri Neeladri Productions and RV Studios. Koneru Satyanarayana and Sireesha Kurapati are producing the project.
The film is being planned as a large-scale action entertainer, with high-intensity action sequences forming a major part of the narrative. However, the makers are also placing equal emphasis on emotion, drama, characterisation and strong storytelling, aiming to create an action film with substantial dramatic depth.

The project has already begun its journey with a traditional pooja ceremony, while the pre-production work is currently underway. The makers are planning to commence the principal shoot in October.
September 23: The Big Reveal
The team has also planned a special announcement for Dhruv Vikram’s birthday.
On September 23, the makers will officially unveil the film’s title, complete cast and technical crew. The announcement is expected to provide audiences with more details about the characters, creative team and the world of the film.
With Dhruv Vikram and Ramesh Varma coming together for the first time, the project is already generating curiosity among both Tamil and Telugu audiences.
The film is being mounted on a grand scale as a bilingual action entertainer, combining action, emotion and drama with a strong narrative.
September 23 — Title • Complete Cast • Entire Crew
October — The Cameras Roll
Dhruv Vikram × Ramesh Varma
DV4 × RV7
