5,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களை இசையால் கட்டிப்போட்ட கௌதம் வாசுதேவ் மேனன்! கோலாலம்பூரில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட ‘ஒன்றா ரெண்டா – GVM-இன் 25 ஆண்டுகள்’
5,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களை இசையால் கட்டிப்போட்ட கௌதம் வாசுதேவ் மேனன்! கோலாலம்பூரில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட ‘ஒன்றா ரெண்டா – GVM-இன் 25 ஆண்டுகள்’
காதல், நினைவுகள், மெல்லிசை என GVM படங்களின் இசை உலகிற்கு ரசிகர்களை அழைத்துச் சென்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!
கோலாலம்பூர்: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகாலத் திரைப்பயணத்தையும், அவரது படங்களில் இடம்பெற்ற மறக்க முடியாத பாடல்களையும் கொண்டாடும் வகையில் நடைபெற்ற ‘ஒன்றா ரெண்டா – GVM-இன் 25 ஆண்டுகள்’ இசை நிகழ்ச்சி, மலேசியாவின் கோலாலம்பூரில் ரசிகர்களின் உற்சாகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த அக்டோபர் 10, 2026 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 5,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்று, தங்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேட்டு ரசித்தனர்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது சர்வதேச அளவில் தனது பயண...

