Friday, November 13
Shadow

Tag: tamil cinema

தாய்நிலம் தேடும் ஒரு தந்தையின் பயணம்… அக்டோபர் 9-ல் வெளியாகும் ‘தாய்நிலம்’!

தாய்நிலம் தேடும் ஒரு தந்தையின் பயணம்… அக்டோபர் 9-ல் வெளியாகும் ‘தாய்நிலம்’!

Latest News, Top Highlights
தாய்நிலம் தேடும் ஒரு தந்தையின் பயணம்… அக்டோபர் 9-ல் வெளியாகும் ‘தாய்நிலம்’! இலங்கை போரின் பின்னணியில், தாய்மண்ணை இழந்த ஒரு தந்தையும் அவரது மகளும் புதிய வாழ்க்கையை தேடி தமிழ்நாட்டிற்கு வரும் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘தாய்நிலம்’. நெனி என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவ் இயக்கியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், கதையின் உணர்வுப்பூர்வமான களம் மற்றும் கதாபாத்திரங்களின் வாழ்க்கைப் போராட்டம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 2016-ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட போர்ச்சூழலுக்குப் பிறகு, உறவுகளையும் சொந்த மண்ணையும் இழந்து, தனது சிறுமகளுடன் தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு தந்தையின் வாழ்க்கையை ‘தாய்நிலம்’ பதிவு செய்கிறது. தாய்மண்ணை விட்டு வெளியேறிய பி...

“14 ஆண்டுகால காத்திருப்புக்கு ‘தி டார்க் ஹெவன்’ கொடுத்த பதில் இதுதான்!” – நடிகர் சித்து உருக்கம்

Latest News, Top Highlights
“14 ஆண்டுகால காத்திருப்புக்கு ‘தி டார்க் ஹெவன்’ கொடுத்த பதில் இதுதான்!” – நடிகர் சித்து உருக்கம் சென்னை: ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு நடைபெற்ற நன்றி அறிவிப்பு விழாவில் நடிகர் சித்து தனது திரைப்பயண அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த நாட்கள் முதல், இன்று தனது படத்தை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடுவதை நேரில் காணும் தருணம் வரை, தனது 14 ஆண்டுகால பயணத்தை அவர் உணர்வுப்பூர்வமாக நினைவுகூர்ந்தார். நிகழ்ச்சியில் பேசிய சித்து, “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு தருணத்தை அனுபவிப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டார். அவர் பேசுகையில்: “சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபோது, தசரதபுரம் எட்டாவது தெருவில் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தேன். அப்போது சினிமா நிறுவனங்கள் அனைத்திற்கும் புகைப்படங்களைக் கொடுத்து வாய்ப்பு தேடி அலைந்தி...
ரசிகர்களின் வரவேற்பால் அதிகரிக்கும் திரையரங்குகள்… ‘என்ன விலை’ படக்குழுவினர் உற்சாகம்!

ரசிகர்களின் வரவேற்பால் அதிகரிக்கும் திரையரங்குகள்… ‘என்ன விலை’ படக்குழுவினர் உற்சாகம்!

Latest News, Top Highlights
ரசிகர்களின் வரவேற்பால் அதிகரிக்கும் திரையரங்குகள்… ‘என்ன விலை’ படக்குழுவினர் உற்சாகம்! நடிகர் கருணாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வித்தியாசமான கதைக்களம், அழுத்தமான திரைக்கதை மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்பு ஆகியவை படத்திற்கு பாசிட்டிவான வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளன. திரையரங்குகளில் படம் பார்த்த ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ள நல்ல வரவேற்பு, சமூக வலைதளங்கள் மற்றும் ‘வேர்ட் ஆஃப் மவுத்’ மூலமாகவும் தொடர்ந்து பரவி வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் ‘என்ன விலை’ திரைப்படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை சொல்லும் விதம், இயக்குநர் சஜீவ் பழூரின் அணுகுமுறை மற்றும் நடிகர்களின் பங்களிப்பு ஆகியவை தொடர்பாக ஊடகங்களிடமிருந்தும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. குறிப...
“என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி” – ‘அன்பில் அவன் நாயகி’ விழாவில் ப்ரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சி

“என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி” – ‘அன்பில் அவன் நாயகி’ விழாவில் ப்ரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சி

Shooting Spot News & Gallerys
“என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி” – ‘அன்பில் அவன் நாயகி’ விழாவில் ப்ரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சி ‘அன்பில் அவன் நாயகி’ திரைப்பட விழாவில் நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நீண்ட உரையைத் தயாரித்து வந்ததாகக் கூறிய அவர், அதைச் சுருக்கமாக வைத்துக்கொண்டு படக்குழுவினருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். படத்தின் பின்னணியில் இருந்து உழைக்கும் கலைஞர்களின் பங்களிப்பை குறிப்பிட்ட ப்ரீத்தி, தயாரிப்பாளர் அபியைப் பற்றி பேசும்போது, “இந்தப் படத்திற்காக அவர் தன்னையே முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார். ஒரு விஷயம் உண்மையிலேயே மதிப்புமிக்கது என்று நம்பினால், அதற்காக ஒரு பெண் எவ்வளவு தூரம் போராட முடியும் என்பதற்கு அபி ஓர் அழகான உதாரணம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், தன்னுடைய ஒவ்வொரு படைப்பையும் தொடர்ந்து பாராட்டி ஊக்கப்படுத்தி வரும் அஷோக் மற்றும...
“அஷோக் செல்வனின் நம்பிக்கையே ‘அன்பில் அவன்’ படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தது!” – இயக்குநர் கார்த்திகேயன்

“அஷோக் செல்வனின் நம்பிக்கையே ‘அன்பில் அவன்’ படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தது!” – இயக்குநர் கார்த்திகேயன்

Latest News, Top Highlights
“அஷோக் செல்வனின் நம்பிக்கையே ‘அன்பில் அவன்’ படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தது!” – இயக்குநர் கார்த்திகேயன் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் நிகழ்வில் இயக்குநர் கார்த்திகேயன் பேசியதாவது: “முதலில் இந்தப் படத்திற்காக என்னுடன் பயணித்த அனைத்து உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவு குழுவினர், தயாரிப்பு குழுவினர் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக என் மனைவியைவிட என் தொலைபேசியுடன் தான் அதிகமாகப் பேசியிருக்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு இந்தப் படம் எனது வாழ்க்கையில் முக்கியமானதாக இருந்திருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்த அனைவரிடமிருந்தும் நல்ல கருத்துகள் கிடைத்துள்ளன. சென்சார் குழுவினர் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். விநியோகஸ்தர்களும் படத்தைப் பார்த்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். மற்ற மொழிகளிலும் படத்தைப் பார்த்தவர்கள் நல்ல கர...

‘அன்பில் அவன்’ எனக்கு ஒரு படம் அல்ல… என் வாழ்க்கையின் ஒரு பகுதி – சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் உருக்கமான பேச்சு!

Shooting Spot News & Gallerys
‘அன்பில் அவன்’ எனக்கு ஒரு படம் அல்ல… என் வாழ்க்கையின் ஒரு பகுதி – சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் உருக்கமான பேச்சு! ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் நிகழ்ச்சியில் சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் கலந்து கொண்டு படத்தின் உருவாக்க அனுபவம் குறித்து உணர்வுப்பூர்வமாகப் பேசினார். அவர் பேசுகையில், “இந்தப் படத்தில் நான் பணியாற்றத் தொடங்கிய பிறகு, இது ஒரு திரைப்படம் என்ற எண்ணத்தைத் தாண்டி, என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. இயக்குநர் கார்த்திக் முதலில் என்னிடம் கதையைப் பற்றி கூறியபோது, எனது வேலைப்பளு காரணமாக உடனடியாக படிக்க முடியவில்லை. பின்னர் கதையை முழுமையாகப் படித்தபோது, அது எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பொதுவாக ஒரு படத்தில் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கும்போது, கதாபாத்திரத்தின் உடல் அசைவுகள், காட்சியின் தன்மை, ஆக்‌ஷன் எப்படியிருக்க வேண்டும் என்பதில்தான் எனது கவன...
“பிரபலங்களுடன் அல்ல… நல்ல மனிதர்களுடன் பணியாற்றுவதையே விரும்புகிறேன்” – ‘அன்பில் அவன்’ இசையமைப்பாளர் கோவில் வசந்தா

“பிரபலங்களுடன் அல்ல… நல்ல மனிதர்களுடன் பணியாற்றுவதையே விரும்புகிறேன்” – ‘அன்பில் அவன்’ இசையமைப்பாளர் கோவில் வசந்தா

Latest News, Top Highlights
“பிரபலங்களுடன் அல்ல… நல்ல மனிதர்களுடன் பணியாற்றுவதையே விரும்புகிறேன்” – ‘அன்பில் அவன்’ இசையமைப்பாளர் கோவில் வசந்தா ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கோவில் வசந்தா பேசியதாவது: “வணக்கம். ‘அன்பில் அவன்’ திரைப்படம் எனக்கு மிகவும் முக்கியமான படம். இது எனது முதல் முயற்சி என்பதால், இந்தப் படைப்பின் மீது எனக்கு தனிப்பட்ட எதிர்பார்ப்பும், பொறுப்பும் இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக படம் எப்படி வந்திருக்கிறது என்பதை நீங்கள் திரையரங்கில் பார்த்து முடிவு செய்யுங்கள். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். இந்தப் படம் மிகவும் உண்மையான முயற்சியாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அசோக் அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானது. இதுவரை நான் பணியாற்றிய தயாரிப்பாளர்களில் அவர் மிகவும் சிறப்பானவர் என்று சொல்லலாம். அதற்கு காரணம் பணம் மட்டுமல்ல. ...
ஜீவனின் ரீ-என்ட்ரி… அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டியின் ‘லவ்வர் பாய்’ படத்தில் இணைந்தார்!

ஜீவனின் ரீ-என்ட்ரி… அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டியின் ‘லவ்வர் பாய்’ படத்தில் இணைந்தார்!

Latest News, Top Highlights
ஜீவனின் ரீ-என்ட்ரி... அர்ஜித் சங்கர் - க்ரித்தி ஷெட்டியின் ‘லவ்வர் பாய்’ படத்தில் இணைந்தார்! ‘காக்க காக்க’, ‘நான் அவனில்லை’ உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் ஜீவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் களமிறங்குகிறார். அவரது அடுத்த படமாக உருவாகி வரும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அசோக் குமார் இயக்குகிறார். வளர்ந்து வரும் நடிகர் அர்ஜித் சங்கர் கதாநாயகனாக நடிக்க, க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘காக்க காக்க’ படத்தில் வித்தியாசமான ஸ்டைலுடன் கூடிய வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமான ஜீவன், தொடர்ந்து ‘நான் அவனில்லை’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி தனக்கென ரச...
காதல்னு நினைச்சா… அடுத்த நொடியே ஆக்ஷன்! ‘அன்பில் அவன்’ டிரெய்லர் சொல்லும் கதை என்ன?

காதல்னு நினைச்சா… அடுத்த நொடியே ஆக்ஷன்! ‘அன்பில் அவன்’ டிரெய்லர் சொல்லும் கதை என்ன?

Shooting Spot News & Gallerys
காதல்னு நினைச்சா… அடுத்த நொடியே ஆக்ஷன்! ‘அன்பில் அவன்’ டிரெய்லர் சொல்லும் கதை என்ன? அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அன்பில் அவன்’ திரைப்படம், தலைப்பையும் இதுவரை வெளியான பாடல்களையும் பார்த்தால் ஒரு அழகான காதல் கதையாகத்தான் தெரிகிறது. ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் டிரெய்லர் படத்தின் மீதான பார்வையையே மாற்றியிருக்கிறது. காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொள்ளும் ஜோடி, புதிதாக வாழ்க்கையை தொடங்க முயற்சிப்பது போன்ற காட்சிகளுடன் டிரெய்லர் ஆரம்பமாகிறது. காதலர்களுக்குள் இருக்கும் நெருக்கம், குடும்பத்தினரின் எதிர்ப்பு என ஆரம்பக்கட்ட காட்சிகள் முழுவதும் காதல் திரைப்படத்துக்கான மனநிலையையே உருவாக்குகின்றன. ஆனால், ஒரு கட்டத்தில் கதை திடீரென வேறு பாதைக்கு செல்கிறது. காதலர்கள் எதிர்பாராத ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்வதும், அதன் பிறகு அவர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களும் டிரெ...
“உண்மையான உழைப்புக்கு நிச்சயம் ஒரு மேஜிக் நடக்கும்!” – சமுத்திரக்கனி கவனம் ஈர்க்கும் ‘கஸ்தூரி வீடு’ பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

“உண்மையான உழைப்புக்கு நிச்சயம் ஒரு மேஜிக் நடக்கும்!” – சமுத்திரக்கனி கவனம் ஈர்க்கும் ‘கஸ்தூரி வீடு’ பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

Latest News, Top Highlights
“உண்மையான உழைப்புக்கு நிச்சயம் ஒரு மேஜிக் நடக்கும்!” – சமுத்திரக்கனி கவனம் ஈர்க்கும் ‘கஸ்தூரி வீடு’ பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ரென்டெக் ஃபிலிம், லயன் வி ஃபிலிம்ஸ், அன்னை சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் புதிய திரைப்படம் ‘கஸ்தூரி வீடு’. விஜய் ஆர். ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, தம்பி ராமையா, டேவிட் டிட்டோ, தனுஜா, ஸ்ரீ வர்ஷத் ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். வெளியிடப்பட்ட ‘கஸ்தூரி வீடு’ டிரெய்லர், ஹாரர் காட்சிகளுடன் ஆன்மிகம், சென்டிமென்ட் மற்றும் அறிவியல் சார்ந்த அம்சங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டிருப்ப...