Friday, November 13
Shadow

Tag: tamil cinema

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – கயாது லோகர் கூட்டணியில் உருவாகும் ‘SK27’!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – கயாது லோகர் கூட்டணியில் உருவாகும் ‘SK27’!

Latest News, Top Highlights
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – கயாது லோகர் கூட்டணியில் உருவாகும் ‘SK27’! சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் புதிய படம் தொடக்கம் சென்னை: சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக, நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. தற்காலிகமாக ‘SK27’ என அழைக்கப்படும் இப்படத்தை இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டரும் வெளியாகியுள்ளது. ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு கவனத்தைப் பெற்ற ராம் குமார் பாலகிருஷ்ணன், இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார். சிவகார்த்திகேயன் மற்றும் ராம் குமார் பாலகிருஷ்ணன் இணையும் முதல் திரைப்படம் என்பதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது....
‘ராட்சசியே’ எனும் மர்மக் குரல்… ‘மண்டவெட்டி’ முதல் பாடலில் மிரட்டும் வைக்கம் விஜயலட்சுமி!

‘ராட்சசியே’ எனும் மர்மக் குரல்… ‘மண்டவெட்டி’ முதல் பாடலில் மிரட்டும் வைக்கம் விஜயலட்சுமி!

Latest News, Top Highlights
‘ராட்சசியே’ எனும் மர்மக் குரல்… ‘மண்டவெட்டி’ முதல் பாடலில் மிரட்டும் வைக்கம் விஜயலட்சுமி! சென்னை: மர்மம், அமானுஷ்யம், குற்றப்பின்னணி என வித்தியாசமான களத்தில் உருவாகி வரும் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ தற்போது வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ள இப்பாடல், படத்தின் மர்ம உலகத்திற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. சரண்ராஜ் செந்தில்குமார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள ‘மண்டவெட்டி’ ஒரு சூப்பர்நேச்சுரல் கிரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது. டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் சார்பில் தயாராகும் இப்படத்தில் கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘ராட்சசியே’ பாடல் படத்தின் அமானுஷ்ய பின்னணியை இ...
‘பத்தா’ டிரெய்லர் வெளியானது: ரௌடியா? குடும்பஸ்தனா? விஜய் சேதுபதியின் புதிய பரிமாணத்தை காட்டும் படம்!

‘பத்தா’ டிரெய்லர் வெளியானது: ரௌடியா? குடும்பஸ்தனா? விஜய் சேதுபதியின் புதிய பரிமாணத்தை காட்டும் படம்!

Latest News, Top Highlights
‘பத்தா’ டிரெய்லர் வெளியானது: ரௌடியா? குடும்பஸ்தனா? விஜய் சேதுபதியின் புதிய பரிமாணத்தை காட்டும் படம்! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 1980-களின் பின்னணியில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், விஜய் சேதுபதி ‘பத்தா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிரெய்லரின் தொடக்கமே பத்தாவின் பெயரைச் சுற்றியுள்ள பரபரப்பை உருவாக்குகிறது. அவரது வீரத்தைப் பற்றி சிறுவர்கள் பேசும் காட்சிகளும், அவரைச் சுற்றியுள்ளவர்கள் கூறும் விஷயங்களும், பத்தா யார் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், டிரெய்லர் நகர நகர பத்தாவின் இன்னொரு பக்கம் வெளிப்படுகிறது. அதிரடியான ரௌடியாக அற...
திரைப்படக் கல்லூரி மாணவர்களின் புதுமையான முயற்சி… ராஜேஷ்குமார் கதையில் உருவாகும் ‘வயலெட் கனவு’!

திரைப்படக் கல்லூரி மாணவர்களின் புதுமையான முயற்சி… ராஜேஷ்குமார் கதையில் உருவாகும் ‘வயலெட் கனவு’!

Latest News, Top Highlights
திரைப்படக் கல்லூரி மாணவர்களின் புதுமையான முயற்சி… ராஜேஷ்குமார் கதையில் உருவாகும் ‘வயலெட் கனவு’! திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கும் புதிய கிரைம் திரில்லர் திரைப்படம் ‘வயலெட் கனவு’. பிரபல கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமார் எழுதிய கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு அவரே கதை மற்றும் திரைக்கதை அமைத்துள்ளார். எம் 4 இண்டர்நேஷ்னல் வழங்கும் இப்படத்தை, அப்பு மூவிஸ் சார்பில் திருமதி. ஏ.முஸ்தரி M.Sc மற்றும் பாபு தூயவன் B.Com D.F.T ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். திரைப்படக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகும் இப்படத்தை பி. நித்யானந்தன் B.A.D.F.T இயக்குகிறார். விவாந்த் – ரெய்னா ஜோடி ‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த விவாந்த், ‘வயலெட் கனவு’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘அங்காரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ரெய்னா, இப்படத்தில்...
கிரைம் டிராமா களத்தில் களமிறங்கும் LK அக்ஷய் குமார் – விஷ்ணு அமரன் இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

கிரைம் டிராமா களத்தில் களமிறங்கும் LK அக்ஷய் குமார் – விஷ்ணு அமரன் இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

Latest News, Top Highlights
கிரைம் டிராமா களத்தில் களமிறங்கும் LK அக்ஷய் குமார் – விஷ்ணு அமரன் இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்! ‘சிறை’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற இளம் நடிகர் LK அக்ஷய் குமார், தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து தனது நடிப்புப் பயணத்தில் புதிய களங்களை நோக்கி பயணித்து வருகிறார். அந்த வரிசையில், அவர் நடிக்கும் புதிய திரைப்படம் சென்னையில் நடைபெற்ற பூஜை விழாவுடன் தொடங்கியுள்ளது. இதையடுத்து படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் S. S. லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். கிரைம் டிராமா பின்னணியில் உருவாகும் இப்படத்தில் LK அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இப்படத்தை இயக்கு...
தி கிராண்ட் மாஸ்டர் – திரை விமர்சனம். (Rank 3.5/5)

தி கிராண்ட் மாஸ்டர் – திரை விமர்சனம். (Rank 3.5/5)

Latest News, Top Highlights
தி கிராண்ட் மாஸ்டர் – சமூக அக்கறையுடன் சிந்திக்க வைக்கும் படைப்பு! தமிழ் சினிமாவில் அவ்வப்போது நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, சமீபகாலமாக வித்தியாசமான கதைக்களம், சமூக அக்கறை மற்றும் புதிய முயற்சிகளுடன் பல படங்கள் தொடர்ந்து வெளியாகி வருவது தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. சிறிய பட்ஜெட் படங்களுக்கும், புதுமுக இயக்குநர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அந்த வரிசையில், இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள ‘தி கிராண்ட் மாஸ்டர்’ திரைப்படம், வித்தியாசமான கதைக்களத்துடன் கவனம் ஈர்க்கிறது. வெற்றிச்செல்வன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், சமூகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளை மையமாகக் கொண்டு கதையை நகர்த்துகிறது. சமூகக் கருத்தை எந்தவிதமான பிர...
டோரதி’ படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது – நடிகர் ரிஷிகாந்த்

டோரதி’ படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது – நடிகர் ரிஷிகாந்த்

Latest News, Top Highlights
‘டோரதி’ படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது – நடிகர் ரிஷிகாந்த் சென்னை: நடிகர் ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாரத்தி’ திரைப்படம் செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் விழாவில் பேசிய அவர், படக்குழுவினருடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். தனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த ரிஷிகாந்த், ‘டாரத்தி’ படத்தின் வாய்ப்பை வழங்கிய இயக்குநர் காத்தியன் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். சினிமா துறைக்குள் வர வேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர்களில் காத்தியனும் ஒருவர் என்றும் அவர் குறிப்பிட்டார். படத்திற்கான தயாரிப்புப் பணிகளின்போது மதுரையில் தங்கி, அங்குள்ள வாழ்க்கை முறையைப் புரிந்துகொண்டு கதாபாத்திரத்திற்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டதாகவும் ரிஷிகாந்த் தெரிவித்தார். எதிர்பார்த்தபடி பயிற்சிகள் நடைப...
“‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… மாற்றத்தை உருவாக்கும் படைப்பு!” – நடிகை கீர்த்தி சுரேஷ் நம்பிக்கை

“‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… மாற்றத்தை உருவாக்கும் படைப்பு!” – நடிகை கீர்த்தி சுரேஷ் நம்பிக்கை

Latest News, Top Highlights
“‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… மாற்றத்தை உருவாக்கும் படைப்பு!” – நடிகை கீர்த்தி சுரேஷ் நம்பிக்கை சென்னை: ‘டோரதி’ திரைப்பட விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: “‘டோரதி’ படத்தின் கதையின் சுருக்கத்தை முதலில் கார்த்திக் சார் என்னிடம் பகிர்ந்தபோது, இப்படியொரு படத்தில் நடிக்க விருப்பமா என்று கேட்டார். கதையைப் படித்தவுடனேயே, ‘கண்டிப்பாக இந்தப் படத்தைச் செய்கிறேன்’ என்று கூறிவிட்டேன். ஏனெனில் இப்படிப்பட்ட படங்களில் ஒரு பகுதியாக இருப்பதே நமக்குப் பெருமை. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பானதாக இருந்தது. ஒரு நடிகராக நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம். ‘டோரதி’ என்ற பெயருக்கே ‘கடவுளின் பரிசு’ என்ற அர்த்தம் உள்ளது. அந்த அர்த்தத்திற்கு ஏற்ற வகையில் இந்தப் படமும் அமையும் என்று நம்புகிறேன். ...
“டோரதி” என் வாழ்வில் மறக்க முடியாத பயணம் – டொராண்டோ அனுபவத்தை பகிர்ந்த சனந்த்!

“டோரதி” என் வாழ்வில் மறக்க முடியாத பயணம் – டொராண்டோ அனுபவத்தை பகிர்ந்த சனந்த்!

Latest News, Top Highlights
“டோரதி” என் வாழ்வில் மறக்க முடியாத பயணம் – டொராண்டோ அனுபவத்தை பகிர்ந்த சனந்த்! டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘டோரதி’ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு தனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளதாக நடிகர் சனந்த் தெரிவித்துள்ளார். ‘டோரதி’ திரைப்பட விழா நிகழ்வில் பேசிய சனந்த், டொராண்டோவில் படம் பார்த்த பலரும் படம் முடிந்தவுடன் தன்னை நேரில் சந்தித்து வாழ்த்தியதோடு, சிலர் உணர்ச்சிவசப்பட்டு தன்னை நீண்ட நேரம் கட்டித்தழுவியதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். “டொராண்டோவில் ‘டோரதி’ படத்தை பார்த்த பலரும் படம் முடிந்தவுடன் உணர்ச்சிவசப்பட்டார்கள். அதன் பிறகு பலர் என்னை தனிப்பட்ட முறையில் வந்து சந்தித்து, ஒரு நிமிடத்திற்கும் மேலாக என்னை கட்டித்தழுவி வாழ்த்தினார்கள். அந்த தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சிறப்பு அனுபவமாக இருக்கும்” என்று சனந்த் குறிப்பிட்ட...
“கார்த்திக் சுப்புராஜின் சிந்தனை எனது வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது!” – ‘டோரதி’ பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சௌந்தரராஜா

“கார்த்திக் சுப்புராஜின் சிந்தனை எனது வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது!” – ‘டோரதி’ பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சௌந்தரராஜா

Latest News, Top Highlights
“கார்த்திக் சுப்புராஜின் சிந்தனை எனது வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது!” – ‘டோரதி’ பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சௌந்தரராஜா ‘டோரதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சௌந்தரராஜா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் படக்குழுவினருடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். கார்த்திக் சுப்புராஜ் குறித்து பேசிய சௌந்தரராஜா, “கார்த்திக் சுப்புராஜை 2008ஆம் ஆண்டு முதலே எனக்குத் தெரியும். அவரைப் பற்றி பேசுவதற்கு எனக்கு சரியான மேடை அமையவில்லை. ‘டோரதி’ படத்தின் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கார்த்திக் உருவாக்கும் திரைப்படங்களில் படம் வெளியாகும் வரை அதன் கதையையோ, முக்கியமான விஷயங்களையோ வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வார். படம் பார்த்த பிறகும் சில நாட்கள் அந்த அனுபவம் ரசிகர்களிடம் புதிதாக இருக்க வேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக...