Wednesday, February 11
Shadow

Tag: #tamilmovie #cinema #village #story

தொரட்டி- சினிமா விமர்சனம் (நேட்டிவிட்டி) Rank 3.5/5

தொரட்டி- சினிமா விமர்சனம் (நேட்டிவிட்டி) Rank 3.5/5

Review, Top Highlights
தமிழ்நாட்டின் கிராமங்களில் வாழும் எளிய மக்களின் வாழ்க்கையை விதவிதமாக எத்தனையோ திரைப்படங்கள் பதிவு செய்துள்ளன. அந்த வரிசையில் இன்னொரு படம் 'தொரட்டி.' இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் பதிவு செய்யாத, விவசாய நிலங்களில் 'கிடை' போட்டு பிழைப்பு நடத்தும் நகர்த்தும் 'கீதாரி' மக்களின் வாழ்க்கைச் சூழலை கதைக்களமாக்கியிருப்பது 'தொரட்டி'யின் தனித்துவம்! பிழைப்புக்காக ஊர் ஊராகப் போகும் மிகமிக எளிமையான கீதாரி குடும்பம் அது. அந்த குடும்பத்தின் ஒரே வாரிசு பிழைக்கப் போன இடத்தில், குடி போதை சுகத்துக்காக கொலை செய்யக்கூட தயங்காத கீழ்த்தரமான மூன்று பேருடன் சேர்ந்து தானும் குடிக்கு அடிமையாகிறான். அவனைத் திருத்துவதற்காக அவனது முறைப் பெண்ணைக் கட்டி வைக்கிறார்கள். அவன் திருந்த நினைத்தாலும் காலச்சூழல் அந்த இழிபிறவிகளோடு தொடர்பு ஏற்படுத்துகிறது. அந்த கூடா நட்பால் அவன் குடும்பம் சந்திக்கும் விளைவுகளே மிச்ச...