நடிகை டாப்சி பிறந்த தினம்
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். இவர் பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர். வடிவழகுத்துறையில் நுழையும் முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். 2010 இல் சும்மாண்டி நாதம் எனும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையுள் நுழைந்தார். இவர் ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் ஆடுகளம், ஆரம்பம், முனி-3 படங்களில் நடித்த நடிகை டாப்சி தற்போது பாலிவுட்டில் மையம் கொண்டுள்ளார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ஜுத்வா-2 படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், மெர்சிடிஸ் – பென்ஸ் கார் ஒன்றை தனக்குத் தானே பரிசளித்து இருக்கிறார் டாப்சி. அதற்கு ‘மார்கரெட்’ என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்...

