தளபதி விஜய் படம் இயக்க காத்திருக்கிறேன் தல இயக்குனர் அதிரடி
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று' வெற்றிப் படங்களை இயக்கிய பின், தமிழ் பட உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். அடுத்த கட்டமாக, போனிக் கபூர் தமிழில் தயாரிக்கும், நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
அஜித், வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்க, பிரம்மாண்ட படமாக தயாராகி இருக்கும் நேர் கொண்ட பார்வை படம், வரும் 8ல் ரிலீசாகிறது.
இந்நிலையில், போனிக் கபூர் தயாரிக்க, நடிகர் அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார் வினோத். விரைவில் அடுத்தப் படத்தின் படபிடிப்பும் துவங்க இருக்கிறது. இந்நிலையில், வினோத் அளித்திருக்கும் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது;
நடிகர் அஜித்தை வைத்து இரு படங்கள் அடுத்தடுத்து இயக்குவது என்பது எனக்கான பெருமை. என் திறமைக்க...
