Thursday, September 17
Shadow

Tag: #Thalapathy

விரைவில் தொடங்குகிறது துப்பறிவாளன் 2

விரைவில் தொடங்குகிறது துப்பறிவாளன் 2

Latest News, Top Highlights
துப்பறிவாளன் படத்தின் 2-ம் பாகம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் வெளியானது. க்ரைம் திரில்லராக உருவான இந்தப் படத்தில் வினய், பிரசன்னா, ஆன்ட்ரியா, அனு இம்மானுவேல், சிம்ரன், கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக இந்தப் படத்தை விஷால் தயாரித்திருந்தார். படத்துக்கு அரோல் கரோலி இசையமைத்திருந்தார். படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று லாபத்தை ஈட்டித் தந்தது. தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உறுதியாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் துருக்கியில் படப்பிடிப்பில் இருக்கும் விஷாலை நேரில் சந்தித்த மிஷ்கின் படத்தின் கதையைக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து துப்பறிவாளன் 2 விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
தளபதி 63 முதல் பார்வை மற்றும் தலைப்பு வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி 63 முதல் பார்வை மற்றும் தலைப்பு வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்த படத்திற்காக பெரியளவிலான கால்பந்து ஸ்டேடியம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கட்டப்பட்டு உள்ளது. இந்த செட்டின் புகைபடங்கள் சமூக இணைய தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் போஸ்டர் ஆகியவை வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது....
அடுத்த மாதம் தல – தளபதி ரசிகர்களுக்கு ஒரே நாளில் விருந்து

அடுத்த மாதம் தல – தளபதி ரசிகர்களுக்கு ஒரே நாளில் விருந்து

Latest News, Top Highlights
ஜெ.சா.புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாஹிப் கி.ஜாபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து, வெற்றி மகாலிங்கம் தயாரிக்கும் படம் ‘விசிறி’. இதில் ராம்சரவணா, ராஜ், சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். ரெமோனா ஸ்டெபனி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பி.டி.அரசகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் ஆகிய “தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா ரசிகர்களிடம் தொடங்கிய மோதல், “எம்.ஜி.ஆர். - சிவாஜி, ‘ரஜினி - கமல்’ என்று தொடர்ந்தது. அந்த வரிசையில் ‘தல-தளபதி’ ரசிகர்களின் மோதல் மிக முக்கியமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமானதும் கூட. அதை மையக்கருவாக வைத்து விசிறி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, விறுவிறுப்பாக பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து, தணிக்கை குழுவினருக்கு இப்படத்தை அனுப்பி...
தளபதி ஓய்வெடுக்க எங்கு சென்றுள்ளார் தெரியுமா..??

தளபதி ஓய்வெடுக்க எங்கு சென்றுள்ளார் தெரியுமா..??

Latest News, Top Highlights
  மெர்சல் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு விஜய் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். விஜய் குடும்பத்துடன் லண்டனில் சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு அங்கிருந்து தற்போது சீனாவுக்கு சென்றுள்ளாராம். ஜனவரி 12 ஆம் தேதி அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளாராம். இம்மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத முதல் வாரத்தில் தளபதி 62 படப்பிடிப்பினை துவங்க திட்டமிட்டுள்ளார்களாம். இந்த வருட தீபாவளிக்கு வெளியிட ‘தளபதி 62’ படக்குழு திட்டமிட்டுள்ளதாம். மேலும், அதே நாளில் அஜித்தின் விஸ்வாசம் படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது....